'அஞ்சாம் பத்திரா' தமிழ் ரீமேக்கின் நாயகன் பொறுப்பிலிருந்து அதர்வா விலகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆஷிக் உஸ்மான் தயாரிப்பில், மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கத்தில் வெளியான படம் 'அஞ்சாம் பத்திரா'. இந்தப் படத்தில் குஞ்சக்கோ போபன், ஷரஃப்பு தீ, உன்னிமயா பிரசாத் உள்ளிட்டோர் நடித்தனர். காவல்துறையினரை இரக்கமின்றித் தொடர் கொலைகள் செய்யும் கொலைகாரனைக் கண்டுபிடிக்கும் த்ரில்லர் கதை இது.
2020-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் இந்தி ரீமேக் விரைவில் தொடங்கப்படவுள்ளது. அதேபோல் தமிழ் ரீமேக் உரிமையும் விற்பனையாகியுள்ளது.
இதில் நாயகனாக நடிக்க அதர்வாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. அவரும் நடிக்க உறுதியாக இருந்தார். ஆனால் தயாரிப்பு நிறுவனத்தின் நடவடிக்கைகள் மற்றும் இதர நடிகர்களின் தேர்வில் அதிருப்தி ஏற்பட்டதால் அதர்வா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக வேறு யார் நடிக்கவுள்ளார் என்பது விரைவில் தெரியவரும்.
முக்கிய செய்திகள்
சினிமா
28 mins ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago