ஓடிடியில் 'சார்பட்டா பரம்பரை': வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள 'சார்பட்டா பரம்பரை' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. வடசென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்திய இந்தக் கதையில் நடிப்பதற்காக ஆர்யா தனது உடலமைப்பை முழுமையாக மாற்றினார். ஆர்யாவுடன் நடித்தவர்களும் இந்தப் படத்தின் கதைக்காகக் கடுமையாக மெனக்கெட்டுள்ளனர்.

இதன் படப்பிடிப்பு, இறுதிக்கட்டப் பணிகள் என அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் முடிவடைந்து திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பதே தெரியாமல் உள்ளது. இதனால் முன்னணி ஓடிடி நிறுவனங்களிடம் நேரடி டிஜிட்டல் வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு.

இதில் அமேசான் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தனர். தற்போது 'சார்பட்டா பரம்பரை' படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பதை அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜூலை 22-ம் தேதி அமேசான் ஓடிடி நிறுவனத்தில் 'சார்பட்டா பரம்பரை' வெளியாகவுள்ளது. விரைவில் ட்ரெய்லரை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

'சார்பட்டா பரம்பரை' படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ், ஜான் விஜய், சஞ்சனா நடராஜன், துஷாரா உள்ளிட்ட பலர் ஆர்யாவுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.முரளி, எடிட்டராக ஆர்.கே.செல்வா, கலை இயக்குநராக டி.ராமலிங்கம், சண்டை இயக்குநராக அன்பறிவ் ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்துள்ளனர். கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்