'டேய் தகப்பா' என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் பிரபு சாலமனின் மகன் சஞ்சய்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பிரபு சாலமன். பல்வேறு நடிகர்களைத் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் செய்துள்ளார். தற்போது அவருடைய மகன் சஞ்சய் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.
இந்தப் படத்தை பிரபு சாலமன் இயக்கவில்லை. கெளசிக் ஸ்ரீபுஹர் இயக்கவுள்ளார். 'டேய் தகப்பா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று (ஜூலை 7) நடைபெற்றது. பல்வேறு குறும்படங்களை இயக்கியுள்ள கெளசிக் ஸ்ரீபுஹர், 'டேய் தகப்பா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஜோ ஜோ இந்தியன் பிலிம் கார்பரேஷன் சார்பாக சி.வி. விக்ரம் சுர்யவர்மா தயாரிக்கவுள்ளார்.
படத்தின் நாயகியாக ஆராத்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் மதுரை முத்து, விஜய் டிவி பப்பூ, ஹர்ஷ்த் கான் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இசையமைப்பாளராக ஜான் ராபின்ஸ், ஒளிப்பதிவாளராக எஸ்.ஜே.சுபாஷ், நடன இயக்குநராக பாபா பாஸ்கர் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
» நடிகர் திலீப் குமார் மறைவு: அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் இரங்கல்
» குப்பைப் படம்; ஸ்கார்லெட்டை நினைத்து சங்கடப்படுகிறேன் - ‘ப்ளாக் விடோ’ படத்தை விமர்சித்த நடிகர்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago