ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவை எதிர்ப்பது ஏன்?- எஸ்.ஆர்.பிரபு விளக்கம்

By செய்திப்பிரிவு

ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவுக்கு எதிராகத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.

ஜூன் 18-ம் தேதி ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை வெளியிட்டது மத்திய அரசு. அந்த மசோதா வெளியானதிலிருந்து இந்தியா முழுக்க உள்ள பல்வேறு திரைக் கலைஞர்கள் தங்களுடைய கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள். இது தொடர்பாக 1400 கலைஞர்கள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடிதம் எழுதினார்கள்.

தமிழ்த் திரையுலகில் இந்த மசோதாவுக்கு கமல் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். அவரைத் தொடர்ந்து சூர்யா, விஷால், கார்த்தி, கெளதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், நீரவ் ஷா உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பைத் தங்களுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

தற்போது ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக த் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா நாட்டின் இறையாண்மை காக்கவே என ஒரு கூட்டம் கம்பு சுத்துகிறது. இவ்வாறான விஷயம் முன்பே இருந்திருந்தால் 'அருவி', 'ஜோக்கர்' போன்ற படங்கள் வந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆகவேதான் நாங்கள் அதை எதிர்க்கிறோம். மற்றபடி வாழ்க பாரதம் என முழங்குவதில் எங்களுக்கும் பெருமிதமே!!"

இவ்வாறு எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்