மகன் இறந்த இரு வாரங்களில் கணவரும் கரோனாவால் பலி: நடிகை கவிதாவுக்கு திரையுலகினர் ஆறுதல்

By செய்திப்பிரிவு

மகனைத் தொடர்ந்து கரோனாவுக்கு கணவரும் பலியானதால், நடிகை கவிதாவுக்கு திரையுலகினர் பலரும் ஆறுதல் கூறிவருகிறார்கள்.

தென்னிந்தியத் திரையுலகில் குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் கவிதா. 1976-ம் ஆண்டு 'ஓ மஞ்சு' என்ற தமிழ்ப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்பு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் கவிதா.

படங்கள் மட்டுமன்றி தொலைக்காட்சித் தொடர்களிலும் கவனம் செலுத்தி வந்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'என்றென்றும் புன்னகை' தொடரில் நடித்து வருகிறார். கரோனா முதல் அலை தொடங்கியதிலிருந்து எந்தவொரு படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே குடும்பத்தினருடன் இருந்தார் கவிதா.

இந்நிலையில் கவிதாவின் மகன் சாய் ரூப், கணவர் தசரதராஜ் இருவருமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

ஜூன் 16-ம் தேதி சிகிச்சைப் பலனின்றி மகன் சாய் ரூப் மரணமடைந்தார். அவரைத் தொடர்ந்து கணவர் தசரதராஜும் சிகிச்சைப் பலனின்றி இன்று (ஜூன் 30) உயிரிழந்தார். மகன் இறந்து 14 நாட்களே ஆகியுள்ள நிலையில், கணவரையும் கரோனாவுக்கு பலி கொடுத்துள்ளார் கவிதா. அவருக்குத் திரையுலக நண்பர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

மேலும்