'வலிமை' அப்டேட் குறித்த பதாகையின் புகைப்படத்தை வெளியிட்டு, தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளது. அதனை வெளிநாட்டில் படமாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் குறைந்து வெளிநாட்டு அனுமதிக்காகப் படக்குழு காத்திருக்கிறது.
ஜூலை மாதத்தில் 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடப் படக்குழு ஆலோசித்து வருகிறது. இதனிடையே, நீண்டகாலமாக எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் இருப்பதால், 'வலிமை அப்டேட்' வேண்டும் என்று சமூக வலைதளத்தில் ஒவ்வொரு பிரபலத்திடமும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
சமீபத்தில், இந்தியா - நியூஸிலாந்து கிரிக்கெட் போட்டியின் இடையேயும் 'வலிமை அப்டேட்' என்ற பதாகையை ரசிகர்கள் வைத்திருந்தனர். இந்தப் புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலானது. மேலும், இந்தப் புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் பகிர்ந்துள்ளார்.
» ஓடிடியில் வெளியாகிறது டாக்டர்
» கரோனா காலகட்டத்திலும் வசூல் சாதனை படைத்த ‘எஃப் 9: தி ஃபாஸ்ட் சாகா’
அதோடு, "யாருக்காவது இதற்கு விடை தெரியுமா? இதுவரை நான் பிரிட்டனில் பார்த்த விஷயங்களிலேயே இதுதான் மிகவும் நகைச்சுவையான, அதே நேரம் பதிலளிக்க மிகவும் கடினமான கேள்வி" என்று தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவுடன் அஸ்வின் மற்றும் மொயின் அலி ஆகியோரின் இன்ஸ்டாகிராம் கணக்குகளையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா - நியூஸிலாந்து கிரிக்கெட் போட்டியின்போது வர்ணனையாளராகப் பணிபுரிந்து வந்தவர் தினேஷ் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago