திரையரங்குகளில் 'சினம்' வெளியீடு: அருண் விஜய் உறுதி

By செய்திப்பிரிவு

திரையரங்குகளில்தான் 'சினம்' வெளியாகும் என்று அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சினம்'. இந்தப் படத்தில், காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் அருண் விஜய். நாயகியாக பல்லக் லால்வாணி நடித்துள்ளார்.

ஷபீர் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். மூவிங் ஸ்லைட்ஸ் நிறுவனம் சார்பில் அருண் விஜய்யின் தந்தை விஜயகுமாரே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இதன் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது.

கரோனா அச்சுறுத்தலால் இதன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்பட்டது. தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்து வருவதால் 'சினம்' வெளியீடு தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார் அருண் விஜய்.

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

" 'சினம்' அதன் ரசிகர்களை பிரம்மாண்டமான திரையரங்க வெளியீடாகச் சந்திக்கவுள்ளது. தொற்று குறைந்து விரைவில் திரையரங்குகள் திறக்கப்படவுள்ள நிலையில், 'சினம்' விரைவில் திரையரங்குகளில் வெளியாகும். வரும் நாட்களில் சிறப்பான, பாதுகாப்பான சூழல் அமையும் என்றும் நம்புவோம்".

இவ்வாறு அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்