'விக்ரம்' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் நரேன் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

கமல் நடிக்கவுள்ள 'விக்ரம்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நரேன் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திரையுலகப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் கமல். தனது அடுத்த படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'விக்ரம்' படத்தை அறிவித்துள்ளார். இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து டர்மரீக் மீடியா நிறுவனமும் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார். இதில் கமலுடன் நடிக்க நடிகர்கள் ஒப்பந்தம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஃபகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் ஏற்கெனவே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து நரேனும் தற்போது கமலுடன் நடிக்கவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' படத்தில் நரேன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 'இந்தியன் 2' வழக்கு தொடர்பான தீர்ப்பு வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து 'விக்ரம்' படப்பிடிப்பு தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்