மீண்டும் இணையும் தனுஷ் - சாய் பல்லவி ஜோடி?

By செய்திப்பிரிவு

சேகர் கம்முல்லா இயக்கவுள்ள படத்தில் தனுஷ் - சாய் பல்லவி ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, ரோபோ ஷங்கர், டோவினோ தாமஸ், வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மாரி 2'. இந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், தனுஷ் - சாய் பல்லவி ஜோடி பலரது கவனத்தையும் ஈர்த்தது.

தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் நாயகியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏனென்றால், சேகர் கம்முல்லா இயக்கத்தில் வெளியான 'ஃபிடா' மற்றும் தற்போது இயக்கி வரும் 'லவ் ஸ்டோரி' ஆகிய படங்களின் நாயகி சாய் பல்லவி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இறுதியில் தனுஷ் படத்தை இயக்க தயாராகி வருகிறார் சேகர் கம்முல்லா. இது முழுக்க அரசியல் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்