விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தை அக்டோபரில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. லலித்குமார் வழங்க முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. ஆனால், படக்குழுவினரோ சுமார் 80% படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள்.
தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்து வருவதால், 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கவுள்ளது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
» 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக்: படக்குழு ஆலோசனை
» தாமதமாகும் 'பொன்னியின் செல்வன்'- நடிகர்கள் மற்ற படங்களில் மும்முரம்
அனைத்து இறுதிக்கட்டப் பணிகளையும் முடித்து, அக்டோபரில் படத்தை வெளியிட 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கேற்ப படத்தின் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago