ரத்னகுமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
'மேயாத மான்', 'ஆடை' ஆகிய படங்களை இயக்கியவர் ரத்னகுமார். இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதிலும் 'ஆடை' திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து, 'மாஸ்டர்' படத்தின் திரைக்கதையிலும் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணிபுரிந்தார் ரத்னகுமார். தற்போது தனது அடுத்த படத்துக்காகத் தயாராகி வருகிறார்.
இந்தக் கதையில் நாயகனாக நடிக்க சந்தானத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவருக்கும் கதை மிகவும் பிடித்துவிடவே சம்மதம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் இந்தப் புதிய கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் எனத் தெரிகிறது.
தற்போது சந்தானம் நடிப்பில் 'டிக்கிலோனா', 'சர்வர் சுந்தரம்' ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. அதனைத் தொடர்ந்து 'சபாபதி' படத்தில் நடித்து வருகிறார் சந்தானம். இதன் படப்பிடிப்பு 70% முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
42 mins ago
சினிமா
57 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago