செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் 'நானே வருவேன்' படப்பிடிப்பு ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்குகிறது.
'என்.ஜி.கே' படத்துக்குப் பிறகு, தனுஷ் நடிக்கவுள்ள 'நானே வருவேன்' படத்தின் முதற்கட்டப் பணிகளை கவனித்து வருகிறார் செல்வராகவன். தாணு தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா, இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்தப் படத்துக்கான போட்டோ ஷூட்டை முடித்துவிட்டார் செல்வராகவன். ஆனால், படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது. கரோனா 2-வது அலை அச்சுறுத்தலால் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பும் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது கரோனா அலை குறைந்து வருவதால், ஆகஸ்ட் 20-ம் தேதி 'நானே வருவேன்' படப்பிடிப்பு தொடங்கும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படப்பிடிப்பு தொடங்குவதற்குள் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் 'சாணிக் காயிதம்' படப்பிடிப்பை முடித்துக் கொடுக்கவுள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் 'சாணிக் காயிதம்' படத்தில் செல்வராகவனுடன் கீர்த்தி சுரேஷும் நடித்து வருகிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே, பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
11 mins ago
சினிமா
45 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago