நடிகர் விஜய்யின் அடுத்த படத் தலைப்பும், முதல் பார்வை போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு 'பீஸ்ட்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தளபதி 65'. ஜார்ஜியாவில் முதற்கட்டப் படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. முன்னதாக ஜூன் 22 அன்று விஜய் பிறந்த நாளுக்கு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடப் படக்குழு முடிவு செய்திருந்தது.
இதில் விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக சென்னையில் அரங்குகள் அமைக்கப்பட்டு வந்தன. அப்போதுதான் கரோனா 2-வது அலையின் தீவிரத்தால் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டன.
தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்து வருவதால், தமிழகத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டவுடன் 'தளபதி 65' படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இதனிடையே, ஜூன் 22-ம் தேதி விஜய் தனது 47-வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். இதற்காக ஏதேனும் பிரத்யேக அறிவிப்புகள் இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள்.
» நயன்தாராவிடம் பிடித்த விஷயம் இதுதான்: விக்னேஷ் சிவன் பதில்
» இரண்டு வருடப் பொறியியல் படிப்புக்குப் பின் நான் எடுத்த நல்ல முடிவு: ஃபகத் பாசில்
அவர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வண்ணம் படத்தின் தலைப்பையும், முதல் பார்வை போஸ்டரையும் தயாரிப்புத் தரப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்துக்கு 'பீஸ்ட்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக படத்தின் அறிவிப்பு வரும்போதே பல்வேறு துப்பாகிகள் வரிசை கட்டியிருக்கும் படி ஒரு டீஸர் வெளியானது. எனவே, இந்தப் படம் முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதை உறுதி செய்யும் வகையில் முதல் பார்வை போஸ்டரிலும் விஜய்யின் முரட்டுத்தனமான தோற்றம், பின்னணியில் துப்பாக்கி என வடிவமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago