நயன்தாரா ஒப்புக்கொண்ட 2 படங்கள்

By செய்திப்பிரிவு

ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் 2 படங்களில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. தற்போது மிலந்த் ராவ் இயக்கத்தில் 'நெற்றிக்கண்', ரஜினி நடித்து வரும் 'அண்ணாத்த' மற்றும் விஜய் சேதுபதி - சமந்தா உடன் இணைந்து 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா.

இந்தப் படங்களைத் தொடர்ந்து தெலுங்கில் உருவாகும் 'லூசிஃபர்' ரீமேக்கில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இதுபோகத் தமிழில் நடிக்கப் பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார்.

இதில் 2 இயக்குநர்கள் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, இரண்டிலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு படங்களையுமே ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

49 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

மேலும்