‘சூப்பர்டா தம்பி!’- தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்த ‘அவெஞ்சர்ஸ்’ இயக்குநர்கள்

By செய்திப்பிரிவு

'ஜகமே தந்திரம்' பட வெளியீட்டை முன்னிட்டு தனுஷுக்கு ‘அவெஞ்சர்ஸ்’ இயக்குநர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் இன்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதற்காக பல்வேறு வழிகளில் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு.

இந்நிலையில் 'ஜகமே தந்திரம்' பட வெளியீட்டை முன்னிட்டு ‘அவெஞ்சர்ஸ்’, ‘தி க்ரே மேன்’ இயக்குநர்களான ருஸ்ஸோ சகோதரர்கள் தங்கள் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் ‘சூப்பர்டா தம்பி! தனுஷுடன் பணிபுர்ந்ததில் மகிழ்ச்சி. ‘ஜகமே தந்திரம்’ படக்குழுவினருக்கு வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளனர். அத்துடன் 'ஜகமே தந்திரம்' படத்தின் ட்ரெய்லரையும் பகிர்ந்துள்ளார்.

ருஸ்ஸோ சகோதரர்களின் இந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள தனுஷ் ‘மிக்க நன்றி. நீங்கள் மிகவும் இனிமையானவர்கள். இது எனக்கு மிகப்பெரிய விஷயம்’ என்று பதிலளித்துள்ளார்.

தற்போது ருஸ்ஸோ சகோதரர்கள் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தி க்ரே மேன்’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

47 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்