'மகாமுனி' திரைப்படம் வாங்கிய விருதுகள் தொடர்பாக இயக்குநர் சாந்தகுமார் ட்வீட் செய்துள்ளார்.
சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார், காளி வெங்கட், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மகாமுனி'. 2019-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி வெளியான இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்தது. தமன் இசையமைப்பில் உருவான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் ஆர்யா - சாந்தகுமார் இணைந்து பணிபுரியவுள்ளார்கள். இதனை ஆர்யா தயாரிக்கவுள்ளார். இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் எனத் தெரிகிறது.
இதனிடையே, ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார் இயக்குநர் சாந்தகுமார். இதற்கு ஆர்யா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தனது முதல் ட்வீட்டாக 'மகாமுனி' வாங்கிய விருதுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சாந்தகுமார்.
இதுகுறித்து சாந்தகுமார் கூறியிருப்பதாவது:
" 'மகாமுனி' 9 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. 2 போட்டிகளில் இறுதிவரை சென்றுள்ளது. 1 விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்பட விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. 2 முறை அதிகாரபூர்வமாக விருது விழாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பாராட்டுகள் இன்னும் தொடர்கின்றன".
இவ்வாறு இயக்குநர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
16 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago