'ஜகமே தந்திரம்' படத்திலிருந்து 2 பாடல்கள் நீக்கப்பட்டு இருப்பது ஏன் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் ஜூன் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. நேற்று (ஜூன் 7) 'ஜகமே தந்திரம்' படத்தின் முழுமையான பாடல்கள் வெளியிடப்பட்டன. இதனை முன்னிட்டு, நேற்று இரவு 8:30 மணியளவில் 'ஜகமே தந்திரம்' படத்தின் இசைக் குழுவினர் ட்விட்டர் ஸ்பேஸில் கலந்துரையாடினார்கள்.
இதில் தனுஷ், கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். அப்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் "புஜ்ஜி மற்றும் நேத்து ஆகிய 2 பாடல்களைப் படத்திலிருந்து நீக்கியது ஏன்" என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு கார்த்திக் சுப்புராஜ் பதில் கூறியதாவது:
"அந்த இரண்டு பாடல்களுமே திரையரங்கிற்காக உருவாக்கப்பட்டவை. ஓடிடி தளத்தில் இடைவேளையின்றிப் படம் இருக்கும் என்பதால், அவை நீக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தப் படம் உலக அளவில் உள்ள மக்களுக்குச் சென்றடைய இருப்பதும் ஒரு காரணம். சில மாதங்கள் கழித்து தொலைக்காட்சியில் திரையிடப்படும்போது அந்தப் பாடல்கள் இடம்பெறும்".
இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், 'ஜகமே தந்திரம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியிருப்பதும் உறுதியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago