ஆண் குழந்தைக்கு அப்பாவான மஹத்

By செய்திப்பிரிவு

மஹத் - பிராச்சி மிஸ்ரா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ், தெலுங்கில் நடிகராக வலம் வருபவர் மஹத். இவர் சிம்புவுக்கு மிக நெருங்கிய நண்பராக வலம் வருகிறார். ஆகையால், அவருடைய படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும், நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார்.

2020-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி தனது காதலி பிராச்சி மிஸ்ராவைத் திருமணம் செய்து கொண்டார் மஹத். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி கர்ப்பமாக இருப்பதைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்திருந்தார் மஹத்.

இந்நிலையில், மஹத் - பிராச்சி மிஸ்ரா தம்பதியினருக்கு நேற்று (ஜூன் 7) ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை இருவருமே தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மகன் பிறந்திருப்பது தொடர்பாக மஹத் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இன்று காலை அழகிய ஆண் குழந்தையைக் கொடுத்து கடவுள் எங்களை ஆசீர்வதித்துள்ளார். இதில் நானும் பிராச்சியும் அதிக சந்தோஷத்தில் இருக்கிறோம். உங்கள் அனைவரின் அன்புக்கும், நல்வாழ்த்துகளுக்கும் நன்றி. தந்தையாக இருப்பதை உற்சாகத்துடன் எதிர்நோக்கியிருக்கிறேன்".

இவ்வாறு மஹத் தெரிவித்துள்ளார்.

தற்போது மஹத் நடிப்பில் 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா', 'இவன்தான் உத்தமன்', 'காதல் Conditions Apply' உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்