சிலம்பரசன் பட பணிகளைத் தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்

By செய்திப்பிரிவு

சிலம்பரசன் நடிக்கவுள்ள 'பத்து தல' படத்தின் பாடல் பதிவு பணிகளைத் தொடங்கியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

'மாநாடு' படத்தின் பணிகளை முடித்துவிட்டு, 'பத்து தல' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சிலம்பரசன். இந்தப் படம் கன்னடத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காகும். இந்தப் படத்தின் மீதான பிரச்சினைகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்பட்டு, 'சில்லுனு ஒரு காதல்' இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

'பத்து தல' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிலம்பரசன், கெளதம் மேனன், கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், டிஜே, மனுஷ்ய புத்திரன் உள்ளிட்ட பலர் நடிக்க விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதால், பாடல் பதிவு வேலைகளை இப்போதே தொடங்கிவிட்டது படக்குழு. 2 பாடல்களைப் பதிவு செய்து முடித்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். விரைவில் அடுத்த பாடல்களை முடிக்க பணிபுரிந்து வருகிறார் என்கிறது படக்குழு.

கன்னியாகுமரியை சுற்றியுள்ள பகுதிகளில் 'பத்து தல' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு இருக்கும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்