'துப்பறிவாளன் 2' படத்தை இளையராஜாவுக்குத் திரையிட்டுக் காட்ட ஆவலாக இருப்பதாக விஷால் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'துப்பறிவாளன் 2'. விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்க, லண்டனில் படப்பிடிப்பு தொடங்கியது. அதன் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியவுடன் மிஷ்கின் - விஷால் இருவருக்கும் மோதல் வெடித்தது.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் பொறுப்பிலிருந்து மிஷ்கின் விலகினார். அதனால் விஷால் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து 'துப்பறிவாளன் 2' படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இதில் அஷ்யா, ரகுமான், கெளதமி, பிரசன்னா உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்து வந்தார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இன்று (ஜூன் 2) இளையராஜா பிறந்த நாளாகும். இதனால் பலர் தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளத்திலும் இளையராஜாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது இளையராஜாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக விஷால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"சகாப்தம், நமது மேஸ்ட்ரோ இளையராஜாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் தர வேண்டும்.
நீண்ட நாட்களாக உங்களுடன் பணியாற்றக் காத்திருக்கிறேன். ஊரடங்கு முடிந்து, படப்பிடிப்பு முடிந்ததும் ’துப்பறிவாளன் 2’ படத்தை உங்களிடம் திரையிட்டுக் காட்டக் காத்திருக்கிறேன். ஆன்மாவைத் தொடும் இன்னும் பல பாடல்களை நீங்கள் எங்களுக்காகத் தர வேண்டும்".
இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
14 mins ago
சினிமா
26 mins ago
சினிமா
37 mins ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago