ஓடிடியில் 'ஜகமே தந்திரம்' படம் வெளியாகிறது. இதற்கான வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் கடும் போட்டிக்கு இடையே இந்தப் படத்தின் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் இன்று (ஜூன் 1) வெளியிட்டுள்ளனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
'ஜகமே தந்திரம்' படத்தின் ட்ரெய்லரின் படி, இந்தப் படம் ஜூன் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் தனுஷ் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago