வெங்கட் பிரபுவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிலம்பரசன் நடித்து வரும் 'மாநாடு' படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இந்தப் படத்தில் எஸ்.ஏ.சி., எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். யுவன் இசையமைத்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே பாக்கியுள்ளது. இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 'மாநாடு' படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், வெங்கட் பிரபுவின் அடுத்த படம் என்ன என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
தற்போது வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
ராக்போர்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை கரோனா முதல் அலை ஊரடங்கின்போதே வெங்கட் பிரபு முடித்துவிட்டார் எனவும், இதில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு பிரேம்ஜி இசையமைக்கவுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago