'டக் ஜெகதீஷ்' திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாகத் தகவல் பரவியது. இதற்குப் படக்குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சிவா நிர்வானா இயக்கத்தில் நானி, ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டக் ஜெகதீஷ்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. சாஹூ மற்றும் ஹரிஷ் இருவரும் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.
இந்தப் படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் பரவியது. இதற்குப் படக்குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். கண்டிப்பாக முதலில் திரையரங்கில்தான் 'டக் ஜெகதீஷ்' வெளியாகும் எனவும், ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படம் இருக்கும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.
ஓடிடி நிறுவனங்கள் 'டக் ஜெகதீஷ்' படத்தைக் கைப்பற்றப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. எதிர்பார்த்த விலை அமையாத காரணத்தால் மட்டுமே, இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
» முடிவுக்கு வருகிறது 'நரகாசூரன்' வெளியீட்டு சர்ச்சை?
» பாலியல் தொல்லை விவகாரம்; இப்போதாவது மன்னிப்பு கோருங்கள்; சாதிப் பிரச்சினையாக மாற்றாதீர்கள்: விஷால்
முன்னதாக, கரோனா முதல் அலை ஊரடங்கின்போது, நானி நடிப்பில் உருவான 'வி' திரைப்படம் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago