மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் தூக்கிலிடப்பட வேண்டும் என்று விஷால் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை கே.கே.நகரில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், வகுப்பில் மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், ஒரு மாணவியை சினிமாவுக்கு அழைக்கும் அளவுக்குச் சென்றதாகவும், மாணவிகளிடம் நேரடியாகவும், செல்போனிலும் அத்துமீறியதாகவும், ஆன்லைன் வகுப்புகளின்போது எல்லை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறார். அவரைப் பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது. பல்வேறு மாணவிகள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்துப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.
பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் தொடர்பாக, பல்வேறு பிரபலங்கள் தங்களுடைய கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக விஷால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"பிஎஸ்பிபி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் செய்த பாலியல் தொல்லை என்னைக் குறுகச் செய்கிறது. அந்தப் பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை உணர வைத்தது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் / பெற்றோர்களிடம் ஒருவரும், ஒருமுறை கூட மன்னிப்பு கோரவில்லை. இதுபோன்ற குற்றங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என் நண்பர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியைக் கேட்டுக் கொள்கிறேன்.
இதை ஒரு சாதிப் பிரச்சினையாக மக்கள் மாற்றுவது வெட்கக்கேடானது. மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் தூக்கிலிடப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களுக்கு உடனடி தண்டனை கிடைக்கும் என்பது இனிவரும் காலங்களில் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரியும்.
குறைந்தது இப்போதாவது மாணவர்களிடம் / பெற்றோரிடம் மன்னிப்பு கோருங்கள். இதைச் சாதிப் பிரச்சினையாக மாற்றாதீர்கள்."
இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
40 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago