விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 65' படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தளபதி 65'. இன்னும் இந்தப் படத்துக்குப் பெயரிடப்படவில்லை. ஜார்ஜியாவில் முதற்கட்டப் படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதில் விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக சென்னையில் அரங்குகள் அமைக்கப்பட்டு வந்தன. அப்போதுதான் கரோனா 2-வது அலையின் தீவிரத்தால் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டன.
முதலில் இந்தப் படம் அறிவிக்கப்பட்டபோது, 2022-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்டது. தற்போது படப்பிடிப்பு தாமதமாவதால் இதன் வெளியீட்டில் மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது. பொங்கல் வெளியீட்டுக்கு பதிலாக தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக மாற்றலாம் என்ற ஆலோசனையில் படக்குழு இருக்கிறது.
விரைவில் அடுத்தகட்டப் படப்பிடிப்புகளை முடித்து, ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும்போது, ரிலீஸ் குறித்து அறிவிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago