தாவர வளர்ப்பு குறித்த புதிய சவாலை நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பொது முடக்கத்தின் போது பிரபலங்கள் பலரும் சமையல், இசை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு வந்தனர். அதனை புகைப்படம் மற்றும் வீடியோக்களாகவும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டனர்.
அந்த வகையில் பிரபல நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா தன் வீட்டு பால்கனியில் தாவரங்கள் வளர்ப்பது குறித்து பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் இந்த ஆண்டும் ஊரடங்கு நேரத்தில் தாவரங்கள் வளர்ப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்ட்ரியா பகிர்ந்துள்ளார். இது குறித்த தனது பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
» 'பிரம்மாஸ்த்ரா' படத்துக்காக 10 டீஸர், 13 மோஷன் போஸ்டர்கள்
» பூம்பூம் மாட்டுக்காரரின் திறமை: வாய்ப்பளித்த ஜி.வி.பிரகாஷ்
கடந்த ஆண்டு பொதுமுடக்கத்திலிருந்தே நான் என்னுடைய வீட்டுக்கு உள்ளேயும், வீட்டை சுற்றியும் பசுமையான தாவரங்களை வளர்த்து வருகிறேன். எவ்வளவு சிறிய தாவரமாக இருந்தாலும் சரி, நாம் வாழும் இடத்தை உயிர்ப்புடன் வைக்க இது ஒரு எளிய வழி.
உங்கள் வீட்டில் பால்கனி இருந்தால், வெளியே சென்று தாவரங்களை நடுங்கள், இல்லையென்றால் வீட்டை சுற்றிலும் சிறிய ஜாடிகளில் தாவரங்களை வளர்க்கலாம், அதுவும் கடினமென்றால் ஓவியம் தீட்டப்பட்ட பாட்டில்களை தேர்ந்தெடுக்கலாம்.
இந்த தாவரங்கள் என்னுடைய வீட்டுக்கு உள்ளேயும், வீட்டை சுற்றியும் நேர்மறை ஒளியை உருவாக்குகின்றன என்று உறுதியாக நம்புகிறேன். அதுதான் இந்த இருண்ட காலகட்டத்தில் மிகவும் தேவையான ஒன்று. கடந்த ஊரடங்கின் போது எலுமிச்சை விதைகளை வைத்தேன், தற்போது அது ஒரு அழகான எலுமிச்சை செடியாக வளர்ந்துள்ளது.
இதை நாம் அனைவரும் ஒரு சவாலாக ஏற்றுக் கொள்ளலாம். இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் ஒரு பசுமை முனையை உருவாக்க முயற்சி செய்யுங்கள்.
இவ்வாறு ஆண்ட்ரியா கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago