கே.வி.ஆனந்தை நினைவு கூரும் வகையில் அவருடைய உதவியாளர்கள் வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநர், ஒளிப்பதிவாளராக வலம் வந்தவர் கே.வி.ஆனந்த். 'கனா கண்டேன்', 'அயன்', 'கோ', 'மாற்றான்', 'அனேகன்', 'கவண்’, 'காப்பான்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும், பல முன்னணி நாயகர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளார். ஏப்ரல் 30-ம் தேதி அதிகாலை மாரடைப்பால் காலமானார். கே.வி.ஆனந்தின் மறைவு திரையுலகினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தற்போது அவரிடம் பணிபுரிந்த உதவி இயக்குநர்கள் அனைவரும், அவருக்காக வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளனர். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் 'மாற்றான்'. அந்தப் படத்தில் இடம்பெற்ற "யாரோ யாரோ நான் யாரோ" என்ற பாடலை வைத்து இந்த வீடியோவை உருவாக்கியுள்ளனர்.
இந்த வீடியோ முழுக்கவே, கே.வி.ஆனந்த் படப்பிடிப்பில் பணிபுரியும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த வீடியோ பதிவினை சமூக வலைதளத்தில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago