கமல் நடிக்கவுள்ள 'விக்ரம்' படத்தில், வில்லத்தனம் கலந்த அரசியல்வாதியாக நடிக்கவுள்ளார் ஃபகத் பாசில்.
'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து, கமல் நடிக்கவுள்ள 'விக்ரம்' படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரிக் மீடியா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது. படத்தின் அறிமுக டீஸர் மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளது.
அரசியல் பணிகளால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இதில் கமலுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதலில் பிரபுதேவா, லாரன்ஸ் உள்ளிட்ட பலருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இறுதியாக கமலுடன் இன்றியமையாத கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதை ஃபகத் பாசில் பேட்டியொன்றில் உறுதிப்படுத்தினார். அந்தக் கதாபாத்திரம் வில்லத்தனம் கலந்த அரசியல்வாதி கதாபாத்திரம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா 2-வது அலையின் தீவிரம் குறைந்தவுடன், 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கப் படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரியவுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago