மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் விஜயகாந்துக்கு கரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து சில பொய்யான தகவல்கள் பரவின.
இதனால் தேமுதிக தலைமை அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதில், ‘‘தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே வதந்திகளை நம்ப வேண்டாம்’’ என்று தெரிவித்துள்ளது.
தற்போது, கரோனா தொற்று கண்டறிவதற்கான பரிசோதனையில், விஜயகாந்துக்குக் கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிடி ஸ்கேன் பரிசோதனையிலும் கோவிட் நிமோனியா அறிகுறிகள் எதுவும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago