திடீர் உடல்நலக் குறைவு: நடிகர் மன்சூர் அலிகான் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

By செய்திப்பிரிவு

உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மன்சூர் அலிகான். ஆர்.கே.செல்வமணி இயக்கிய ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய வில்லன் நடிகர்களில் ஒருவராக மாறினார். அதனைத் தொடார்ந்து ஏராளமான படங்களில் வில்லனாக நடித்தார். சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். பல படங்களைத் தயாரித்து இயக்கவும் செய்துள்ளார்.

அரசியலில் ஏற்பட்ட ஆர்வத்தால் நாம் தமிழர் கட்சியில் இணைந்து கடந்த மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய மன்சூர் அலிகான், தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற ஒரு கட்சியைத் தொடங்கி, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு 41 வாக்குகளே கிடைத்தன.

இந்நிலையில் மன்சூர் அலிகான் உடல்நலக் குறைவால் சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மரு‌த்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று (மே.10) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரகக் கல் பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்ததால் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்