விஷாலின் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'எனிமி' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. 'எனிமி' படத்துக்குப் பிறகு விஷாலின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.
தற்போது அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தனது 31-வது படத்தை அறிவித்துள்ளார் விஷால். இதனை அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று (மே 6) முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் விஷாலுடன் டிம்பிள் ஹயாத்தி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வேறு யாரெல்லாம் விஷாலுடன் நடிக்கவுள்ளார்கள் என்று படக்குழுவினர் இன்னும் அறிவிக்கவில்லை.
» புதிய ஓடிடி தளம் தொடங்கிய நமீதா
» 25 குடும்பங்களுக்குக் கண்களாக விளங்கியவர்: கோமகன் மறைவுக்கு சேரன் இரங்கல்
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியெம், இசையமைப்பாளராக யுவன், ஆடை வடிவமைப்பாளராக வாசுகி பாஸ்கர் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இந்தப் படத்தில் கவனம் செலுத்திக்கொண்டே கதிரேசன் தயாரிப்பில் ’அடங்கமறு’ இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கவுள்ள படத்திலும் நடிக்க விஷால் முடிவு செய்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
14 mins ago
சினிமா
50 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago