காஜல் அகர்வால் உள்ளிட்ட 5 நாயகிகள் நடிப்பில் புதிய படமொன்றை இயக்கி முடித்துள்ளார் டிகே.
வைபவ், வரலட்சுமி, சோனம் பாஜ்வா, ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காட்டேரி'. டிகே இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. கரோனா அச்சுறுத்தலால் இதன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான பணிகளை மேற்கொண்டு வந்தார் டிகே. இதையும் முழுக்க ஹாரர் காமெடி பின்னணியில் உருவாக்கியிருந்தார். இதில் முதன்மை நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமானார்.
தற்போது, கரோனா 2-வது அலை தீவிரத்துக்கு முன்பே தனது புதிய படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக டிகே தெரிவித்துள்ளார். இதில் காஜல் அகர்வால், ரெஜினா, ரைசா வில்சன், ஜனனி ஐயர், நொய்ரிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் நொய்ரிகா. மும்பையில் மாடலாக இருக்கும் இவர், தமிழில் அறிமுகமாகும் முதல் படமாக இது அமைந்துள்ளது.
» மேற்கு வங்க வன்முறை தொடர்பாக ட்வீட்: கங்கணாவின் ட்விட்டர் கணக்கு தற்காலிக முடக்கம்
» ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா: திருப்பூர் சுப்பிரமணியம் தகவல்
தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் டிகே. விரைவில் படத்தின் பெயருடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடத் திட்டமிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
39 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago