ரஜினியை இயக்கும் தேசிங் பெரியசாமி?

By செய்திப்பிரிவு

ரஜினி படத்தை இயக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு தேசிங் பெரியசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. சிவா இயக்கி வரும் இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பலமுறை தடைப்பட்டு நடைபெற்றது.

இன்னும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவுபெறவில்லை. கரோனா 2-வது அலை தீவிரத்தால் அடுத்தகட்டப் படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் உள்ளது. இதனிடையே, ரஜினியின் அடுத்த படம் குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பது முன்பே உறுதியாகிவிட்டது. தற்போது இந்தப் படத்தை 'பேட்ட' இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அல்லது 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குநர் தேசிங் பெரியசாமி ஆகிய இருவரில் யாராவது ஒருவர் இயக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தகவல் பெரும் வைரலாகி பரவி வருகிறது. இதை வைத்துப் பலரும் தேசிங் பெரியசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கத் தொடங்கினார்கள்.

இந்தச் செய்தி தொடர்பாக தேசிங் பெரியசாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"எனது அடுத்த படம் பற்றிப் பரவி வரும் செய்தி உண்மையல்ல. விரைவில் உங்களுக்கு அதுகுறித்துச் சொல்கிறேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. பாதுகாப்பாக இருங்கள். அக்கறையோடு பார்த்துக் கொள்ளுங்கள்".

இவ்வாறு தேசிங் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்