எதிர்பார்ப்புகளோடும் கேள்விகளோடும் உங்களைப் பார்க்கிறோம்: ஸ்டாலினுக்கு சித்தார்த் வாழ்த்து

By செய்திப்பிரிவு

எதிர்பார்ப்புகளோடும் கேள்விகளோடும் உங்களைப் பார்க்கிறோம் என்று மு.க.ஸ்டாலினுக்கு சித்தார்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 2) காலை முதலே மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி சுமார் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. திமுக தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது.

இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தற்போது மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து வருகிறார்.

தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சித்தார்த் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

"ஜெயலலிதாவுக்குப் பிறகு நம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர். மகத்தான வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். எங்கள் அனைவரின் நலனுக்கு நீங்கள் நல்ல ஆட்சியைக் கொண்டு வருவீர்கள் என நம்புகிறேன். எதிர்பார்ப்புகளோடும் கேள்விகளோடும் உங்களைப் பார்க்கிறோம். வாழ்க தமிழ்".

இவ்வாறு சித்தார்த் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

54 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்