உடைந்து போயிருக்கும் திரைத்துறைக்கும் பிராண வாயு கிடைக்கும்: ஸ்டாலினுக்கு விஷால் வாழ்த்து

By செய்திப்பிரிவு

நமது தமிழகத்துக்கு நல்ல விஷயங்கள் கிடைத்துச் செழிக்கட்டும் என்று மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் விஷால்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 2) காலை முதலே மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி சுமார் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. திமுக தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது.

இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும், நடிகருமான விஷால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

"இந்த அற்புதமான வெற்றிக்கு திமுகவுக்கு வாழ்த்துகள். அன்பு நண்பர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் ஆகியோருக்கு நன்றி. நம் முதல்வர் மு.க.ஸ்டாலினை வருக வருக என வரவேற்கிறேன்.

அடுத்த சில வருடங்களில் நமது தமிழகத்துக்கு நல்ல விஷயங்கள் கிடைத்துச் செழிக்கட்டும். உடைந்து போயிருக்கும் நமது திரைத்துறைக்கும் தேவையான பிராண வாயு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்".

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்