'விடுதலை' படக்குழுவினரின் பலே திட்டம்

By செய்திப்பிரிவு

'விடுதலை' படத்தைப் பல்வேறு மொழிகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருகிறது.

'அசுரன்' படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'விடுதலை'. விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை வெற்றிமாறன் மற்றும் எல்ரெட் குமார் இணைந்து தயாரித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக இளையராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் சத்தியமங்கலம் காடுகளில் தொடங்கப்படவுள்ளது. தற்போது இதுவரை முடித்து வைக்கப்பட்டுள்ள காட்சிகளின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தைப் பல்வேறு மொழிகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

வெற்றிமாறனின் முந்தைய படமான 'அசுரன்' மாபெரும் வரவேற்பைப் பெற்ற படமாகும். இந்திய அளவில் பல்வேறு நட்சத்திரங்கள் பாராட்டு தெரிவித்தார்கள். அதேபோல் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் விஜய் சேதுபதி முன்னணி நாயகனாக வலம்வரத் தொடங்கியுள்ளார்.

இந்த இரண்டையும் கணக்கில் கொண்டு 'விடுதலை' படத்தைப் பல்வேறு மொழிகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக வியாபார வியூகங்களை இப்போதே வகுக்கத் தொடங்கியுள்ளது. அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியானால், பிரம்மாண்டாக வெளியாகும் முதல் வெற்றிமாறன் படமாக 'விடுதலை' இருக்கும் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

49 mins ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்