பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
‘சுல்தான்’ படத்துக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் படம் ‘சர்தார்’. 'இரும்புத்திரை', 'ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ். மித்ரன் இப்படத்தை இயக்குகிறார். ‘சிறுத்தை’ படத்துக்குப் பிறகு இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் ராஷிகண்ணா மற்றும் ‘கர்ணன்’ படத்தில் நாயகியாக நடித்த ரெஜிஷா விஜயன் இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் சிம்ரன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தில் பாலிவுட் நடிகர் சுயாஸ் பாண்டே வில்லனாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பை தென்காசி, சென்னை மற்றும் வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
» 6 நிமிட காட்சி.. ஒரே டேக்! - சிம்புவுக்கு ‘மாநாடு’ குழுவினர் பாராட்டு
» ஆஸ்கர் விருதுகள் 2021: சிறந்த திரைப்படமாக நோமேட்லேண்ட் தேர்வு
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லக்ஷ்மன்குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago