விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா திருமணம் இன்று நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா இருவருமே நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர். 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் இருவருமே தங்களுடைய காதலை உறுதிப்படுத்தினார்கள். ஆனால், திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்தார்கள்.
'காடன்' படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பில், விரைவில் ஜுவாலா கட்டாவைத் திருமணம் செய்யவிருப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22-ம் தேதி அன்று திருமணம் நடைபெறும் என்று கூறினார்கள்.
இன்று (ஏப்ரல் 22) காலை முதலே இவர்களின் திருமணச் சடங்குகள் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தை ஆட்கொண்டன. தற்போது விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா இருவருமே திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இருவருக்கும் பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா இருவருக்குமே முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
சினிமா
16 mins ago
சினிமா
22 mins ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago