சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அரண்மனை 3' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
'ஆக்ஷன்' படத்தைத் தொடர்ந்து, 'அரண்மனை 3' படத்தை இயக்கியுள்ளார் சுந்தர்.சி. இந்தப் படத்தை பென்ஸ் மீடியா மற்றும் குஷ்பு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.
தற்போது 'அரண்மனை 3' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தப் படத்தில் ஆர்யா, சுந்தர்.சி, விவேக், யோகி பாபு, மனோ பாலா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக யு.கே.செந்தில்குமார், இசையமைப்பாளராக சத்யா ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
இந்தப் படத்தை முதலில் கோடை விடுமுறை வெளியீடாகத் திட்டமிட்டனர். தற்போதுள்ள சூழலில் சாத்தியமா என்பது தெரியாத காரணத்தால், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வெளியீடு குறித்து எந்தவொரு குறிப்பையும் படக்குழு தெரிவிக்கவில்லை.
» நிறம் ஒருவருடைய அழகைத் தீர்மானிப்பதில்லை: இலியானா பகிர்வு
» அமைதியுடன் உறங்குங்கள் ஜார்ஜ் ஃப்ளாய்ட்: நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஹாலிவுட் பிரபலங்கள் மகிழ்ச்சி
விவேக் மறைவுக்குப் பிறகு அவர் நடித்துள்ள 'அரண்மனை 3' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், முந்தைய 'அரண்மனை' படங்களை விட இந்தப் படத்தின் பொருட்செலவு மிகவும் அதிகம் என்கிறது படக்குழு.
முக்கிய செய்திகள்
சினிமா
30 mins ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago