நடிகர் வெற்றி அடுத்ததாக அறிமுக இயக்குநர் ஷ்யாம் மனோகரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.
’எட்டு தோட்டாக்கள்’, ’ஜீவி’ ஆகிய திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் வெற்றி. இதில் எட்டு தோட்டாக்களை விட ஜீவி திரைப்படத்தில் அவரது நடிப்புப் பாராட்டப்பட்டது. இரண்டு திரைப்படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது பிக்சர் பாக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
இந்தப் படத்தை ஷ்யாம் மனோகரன் இயக்குகிறார். இதற்கு முன் விளம்பரப் படங்களை இயக்கியிருக்கும் ஷ்யாமின் முதல் திரைப்படம் இது. பயணத்தை மையமாகக் கொண்ட மர்மத் திரைப்படமாக இது உருவாகிறது என தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
பிக்சர் பாக்ஸ் நிறுவனம் இதற்கு முன் ’கருப்பன்’, ’இறைவி’ உள்ளிட்ட படங்களை விநியோகம் செய்து வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் சார்பில் அலெக்ஸாண்டர் படத்தைத் தயாரிக்கிறார். படம் ஆரம்பம் முதல் முடிவு வரை ரசிகர்களை சீட்டின் நுனியில் வைத்திருக்கும் பரபரப்பான திரைக்கதை இது என்று அலெக்ஸாண்டர் கூறியுள்ளார்.
கோடை விடுமுறைக்குப் பிறகு படப்பிடிப்புத் தொடங்குகிறது. மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்ப குழுவினரை இறுதி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago