'விக்ரம்' திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் நடிப்பது குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளார்.
'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து, கமல் நடிக்கவுள்ள 'விக்ரம்' படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதில் வில்லனாக நடிக்க ஏற்கெனவே ஃபஹத் ஃபாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது மேலும் விஜய் சேதுபதியும் இதில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படவிருப்பதாக செய்திகள் உலவுகின்றன.
இது குறித்து சமீபத்தில் பாலிவுட் செய்தி ஊடகம் ஒன்றில் பேசியிருக்கும் விஜய் சேதுபதி, "ஆம் என்னை அணுகியிருக்கிறார்கள். ஆனால் இன்னும் எதுவும் முடிவு செய்யப்படவில்லை. நான் தேதிகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதனால் இப்போதே நான் நடிக்கிறேன் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. படத்தில் ஏற்கெனவே கமல்ஹாசன், ஃபஹத் ஃபாசில் என இரண்டு மாபெரும் நடிகர்கள் இருக்கின்றனர். நான் நடித்தால் என்னால் படத்துக்கு விசேஷமாகப் பங்காற்ற முடிய வேண்டும். இல்லையென்றால் நடிப்பதில் அர்த்தமில்லை" என்று கூறியுள்ளார்.
'பேட்ட' படத்தில் ரஜினிகாந்துக்கு எதிராக எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதி சமீபத்தில் 'மாஸ்டர்' திரைப்படத்தில் விஜய்க்கு எதிராக பிரதான வில்லனாக நடித்திருந்தார். தெலுங்கில் 'உப்பெனா' திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இப்படித் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்துப் பேசியிருக்கும் விஜய் சேதுபதி, "வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவது உண்மைதான். மனித இயல்பின் இருட்டான பக்கம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
திரையில் அத்தனை எதிர்மறை விஷயங்களையும் செய்யும்போது, நிஜ வாழ்க்கையில் என்னால் என்றும் செய்ய முடியாத விஷயங்களை செய்ய முடிகிறது. மாஸ்டரிலும், உப்பென்னாவிலும் எனது கதாபாத்திரங்கள் ஒரே மாதிரி இருந்ததா? அடுத்த வில்லன் கதாபாத்திரத்தில் இதுவரை நான் அறிந்திராத மனித இயல்பின் மோசமான பக்கத்தை இன்னும் ஆராய விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago