மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் விவேக் பூரண நலம் பெற அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். தனது நகைச்சுவையில் சமூக அக்கறை மிகுந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அப்துல் கலாம் மீது தீவிர பற்று கொண்டவர். மரம் நடுவதிலும் ஆர்வம் கொண்டவர்.
இன்று (ஏப்ரல் 16) காலை வீட்டில் குடும்பத்தினர் மத்தியில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பைச் சரிசெய்ய ஆஞ்சியோ சிகிச்சைக்கு முயன்றார்கள். மேலும், இதயச் செயல்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் அவருக்கு எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விவேக் பூரண நலம் பெற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அவற்றின் தொகுப்பு:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிக மனவேதனை அடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் நடிகர் விவேக் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்: உடல்நலம் குன்றி சிகிச்சையில் இருக்கும் சின்ன கலைவாணர் அண்ணன் விவேக் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப விரும்புகிறேன். அன்போடு பழகுவதிலும்-சமூகச் சிந்தனையுடன் செயல்படுவதிலும் அண்ணனுக்கு நிகர் அவரே. அண்ணன் மீண்டு வந்து தமிழக மக்களைச் சிரிக்க-சிந்திக்க வைக்கட்டும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: நடிகர் விவேக் விரைவில் பூரண நலம்பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நகைச்சுவை நடிகர் விவேக், நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாகத் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன்.
திரைப்படங்களில் சிந்திக்க வைக்கும் சமூக அக்கறை கொண்ட பல கருத்துகளை மக்கள் மனதில் பதிய வைப்பதிலும், சமூகச் சேவைகள் செய்வதிலும் என்றும் முதலிடத்தில் திகழும் நடிகர் விவேக், விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நகைச்சுவை நடிகர், நண்பர் விவேக் விரைந்து நலம் பெற வாழ்த்துகிறேன்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: அருமைச் சகோதரர் விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக வெளியாகும் செய்தி வேதனையளிக்கிறது. அவர் விரைவில் முழு உடல்நலம் பெற்று வீடு திரும்பி தனது கலைப்பணியைத் தொடர வேண்டுமென உள்ளன்போடு விழைகிறேன்.
இவ்வாறு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago