களைகட்டும் சின்னத்திரை தேர்தல்

By மகராசன் மோகன்

நடிகர் சங்கத் தேர்தலின் பரபரப்பு குறைந்து அதிக நாட்கள் ஆகவில்லை. அதற்குள் சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கான தேர்தலால் டிவி உலகம் களைகட்டி இருக்கிறது. டிசம்பர் 25-ம் தேதி நடைபெற உள்ள இந்த தேர்தலில் வசந்தம் அணி, உழைக்கும் கரங்கள் அணி, புதிய அலைகள் அணி ஆகிய மூன்று அணிகள் போட்டியிடுகின்றன.

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபரில்தான் நடைபெற்றது. இந்த தேர்தலில் நளினி, ராஜேந்திரன், சிவன் சீனிவாசன் ஆகியோர் தலைமையிலான அணிகள் போட்டியிட்டன. இதில் நளினி தலைமையிலான அணி வெற்றி பெற்றது. ஆனால் அதன் பிறகு தொடர்ந்து சங்கத்துக்குள் பிரச்சினைகள் ஏற்பட, பதவியேற்ற 8 மாதங்களிலேயே சங்க நிர்வாகிகள் சிலர் பொறுப்பில் இருந்து வெளியேறினார்கள். இந்நிலையில் சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் சூழல் உருவானது.

இந்தத் தேர்தலில் வசந்தம் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு சிவன் சீனிவாசன் போட்டியிடுகிறார். துணைத் தலைவர் பதவிகளுக்கு கமலேஷ், வி.சோனியா, செயலாளர் பதவிக்கு போஸ் வெங்கட், இணைச் செயலாளர் பதவிக்கு பரத், கவிதா உள்ளிட்ட நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். புதிய அலைகள் அணி சார்பில் தலைவ ராக பானுபிரகாஷ், துணைத் தலைவர் களாக மனோபாலா, சுந்தர், பொதுச் செயலாளராக பாபுஸ், பொருளாளராக விஜய் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். ரவி வர்மா தலைமையிலான உழைக்கும் கரங்கள் அணியில் பொதுசெயலாளராக எஸ். கனகப்பிரியா, பொருளாளராக ஜெயந்த், துணைத்தலைவர்களாக லஷ்மிபிரசன்னா, வின்சன்ட் ராய் உள்ளிட்டவர்கள் போட்டியிடுகிறார்கள்.

சென்னை விருகம்பாக்கம் ஏ.கே.ஆர்.மஹாலில் நடைபெறவிருக்கும் இந்த தேர்தலில் மொத்தம் 69 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். சின்னத்திரை நடிகர் சங்கத்தை சேர்ந்த 1341 உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது.

திடீர் தேர்தல் ஏன்?

சின்னத்திரைக்கு திடீர் தேர்தல் வந்தது ஏன் என்று கேட்டால், “கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நளினி தலைமையிலான அணி வெற்றி பெற்றது. நளினியின் ஆலோசனை களோடு பொதுச்செயலாளராக இருந்த பூவிலங்கு மோகன் திறம்பட சங்கத்தின் வேலைகளை தொடங்கினார். அவரது அணியில் இருந்த நிர்வாகிகள் சிலர் செய்த குளறுபடிகளால்தான் சங்கத்தின் அடிப்படை வேலைகளை நளினியால் தொடர்ந்து செயல்படுத்த முடிய வில்லை.

பதவி ஏற்ற எட்டு மாதங்களுக் குள்ளேயே நளினியின் தலைமை யிலான அணியின் நிர்வாகம் சரியில்லை என்று அந்த அணியில் இருந்தே சிலர் வெளியேறியிருக்கிறார்கள். இதனால் தேர்தலை நடத்த வேண்டியுள்ளது. அவர்கள் எல்லோரும் ஒரு அணியாக போட்டியிடாமல் இன்று இரு வேறு அணிகளில் நிற்கிறார்கள். அதுவே சங்க நிர்வாகிகளுக்குள் ஒற்றுமையில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது’’ என்கிறார்கள், சின்னத்திரையினர்.

வாக்குறுதிகள்

இந்த தேர்தலில் போட்டியிடும் வசந்தம் அணியினர், “நாங்கள் இளைஞர் சக்தி. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர், விஷால் தலைமையிலான குழு எப்படி வெற்றி பெற்றதோ அதேபோல நாங்களும் வெற்றி பெற்று சொந்த கட்டிடம், வேலைவாய்ப்புக்கான சூழல் உள்ளிட்ட பல விஷயங்களை புதிய உத்வேகத்துடன் செயல்படுத்துவோம்’’ என்கிறார்கள். புதிய அலைகள் அணியினரோ, “புதியவர்களை சங்க உறுப்பினர்களாக்குவதில் அதிக கவனத்தை செலுத்தி, வேலை வாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் சங்கத்தின் சார்பாக உதவிகள் செய்ய முடியாத நிலை உள்ளது. வெற்றி பெற்றதும், அதுதான் எங்கள் முதல் வேலை’’ என்கிறார்கள்.

மற்றொரு அணியான உழைக்கும் கரங்கள், “சின்னத்திரை நடிகர்களுக் கும், அவர்களை சார்ந்த குடும்பத் தினர்களுக்கும் அடிப்படை தேவைகள் நிறைய உள்ளன. அவற்றை நிறை வேற்றுவோம். நடிகர் சங்கத்தைப்போல எங்கள் சங்கமும் தனித்து தெரிய வேண்டும். அதுதான் எங்கள் இலக்கு’’ என்கிறார்கள். இந்த தேர்தலில் சில சினிமா நடிகர்களும் போட்டியிடுவதில் முனைப்பு காட்டி வருகிறார்கள். அது சின்னத்திரையில் மட்டும் தீவிரமாக நடித்துவரும் கலைஞர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சினைகள் என்ன?

தெலுங்கு சின்னத்திரை சங்கத்தினர் டப்பிங் சீரியல்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி அங்கே வெற்றி பெற்றுள்ளனர். இன்றைக்கு அங்குள்ள பல முக்கியமான சேனல்களில் டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பப்படுவதில்லை. அதே நிலை இங்கும் வரவேண்டும் என்பதே சின்னத்திரை கலைஞர்கள் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் ஒரு தொலைக்காட்சி சேனலில் நடிப்பவர்கள், மற்றொரு நிறுவனத்தின் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பங்குபெற்றால் அவர் கள் முதலில் நடித்துவரும் தொடர் கள் அல்லது நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். அதற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும் என்பதும் சின்னத்திரை கலைஞர்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்