கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடித்து வரும் படத்துக்கு 'கோஸ்டி' எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
திருமணத்துக்குப் பிறகும் பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் காஜல் அகர்வால். 'ஹே சினாமிகா', 'இந்தியன் 2', கல்யாண் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகிய தமிழ்ப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
'குலேபகாவலி' மற்றும் 'ஜாக்பாட்' ஆகிய படங்களைப் போலவே, இந்தப் படத்தையும் முழுக்க காமெடியைப் பின்னணியாகக் கொண்டே இயக்கி வருகிறார் கல்யாண். யோகி பாபு, கே.எஸ்.ரவிகுமார், சந்தான பாரதி, மயில்சாமி, ஊர்வசி, சத்யன், மனோபாலா உள்ளிட்ட பலர் காஜல் அகர்வாலுடன் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்துக்கு 'கோஸ்டி' எனப் பெயரிட்டு, ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு ஒளிப்பதிவாளராக ஜேக்கப் ரத்தினராஜ், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். சீட் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.
» விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நாயகனாகும் அதர்வாவின் தம்பி
» ஃபகத் பாசில் ரசிகர் மன்றத் தலைவரான பாலிவுட் நடிகர்: 'ஜோஜி'க்குப் புகழாரம்
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago