8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது 'மதயானைக் கூட்டம்' கூட்டணி.
2013-ம் ஆண்டு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான படம் 'மதயானைக் கூட்டம்'. விமர்சன ரீதியாகப் பலரும் கொண்டாடிய படம். ஆனால் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. கதிர், ஓவியா, கலையரசன், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்துக்கு ரகுநந்தன் இசையமைத்திருந்தார்.
'மதயானைக் கூட்டம்' படம் வெளியாகி 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதிர் நாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கவுள்ளார். இப்படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கிறார், விரைவில் இப்படத்துக்கான முதற்கட்டப் பணிகளைத் தொடங்கவுள்ளனர்.
2019ஆம் ஆண்டு ‘இராவணக் கோட்டம்’ என்ற படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்தார் விக்ரம் சுகுமாரன். இப்படத்தில் நாயகனாக சாந்தனு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
» பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிக்கும் ‘ரைட்டர்’ - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
» ஷங்கர் ஒரு ஜீனியஸ் இயக்குநர்: ‘அந்நியன்’ ரீமேக்கில் நடிப்பது குறித்து ரன்வீர் சிங் பகிர்வு
கடந்த ஆண்டு தினேஷ் நடிப்பில் 'தேரும் போரும்' என்ற படத்தை அறிவித்தார். அதன் பிறகு கரோனா அச்சுறுத்தலால் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago