அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க புதிய படமொன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது.
பாரதிராஜா, வசந்த் ரவி, ரவீனா ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ராக்கி'. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் டீஸர், போஸ்டர்கள் ஆகியவை இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி கைப்பற்றியது.
'ராக்கி' படத்துக்கு உள்ள எதிர்பார்ப்பை முன்வைத்து, அருண் மாதேஸ்வரனுக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைத்தது. அதில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 'சாணிக் காயிதம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது மும்முரமாகப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 'ராக்கி', 'சாணிக் காயிதம்' படங்களைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ள படத்தில் தனுஷை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. செல்வராகவன் - அருண் மாதேஸ்வரன் நட்பை வைத்து இந்தப் படத்தின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது ஆரம்பக்கட்ட நிலையில்தான் இதற்கான பேச்சுவார்த்தை உள்ளது.
» சிம்புவுக்கு 'மாநாடு' ஒரு மைல்கல்: சுரேஷ் காமாட்சி
» ஃபகத் பாசில் படங்களுக்குத் தடையா? கேரளத் திரையரங்க உரிமையாளர் சங்கம் விளக்கம்
தனுஷ் - அருண் மாதேஸ்வரன் இணையும் படத்தைத் தயாரிக்க சத்யஜோதி நிறுவனம் முன்வந்துள்ளது. அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago