ஆயுஷ்மான் குரானா நடித்த ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
அனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்து வெளியான படம் 'ஆர்டிகிள் 15'. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி இந்தப் படம் வெளியானது.
இதில் ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார், மனோஜ் பாவ்வா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக்கை போனி கபூர் கைப்பற்றினார்.
இப்படத்தின் தமிழ்ப் பதிப்பை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார்.
» கர்ணன் படத்துக்குத் திரையுலக பிரபலங்கள் பாராட்டு
» திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த சுனைனா
இந்நிலையில் ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு உதயநிதி ஸ்டாலின் இல்லாமல் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் வரும் 18-ம் தேதியிலிருந்து உதயநிதி ஸ்டாலின் படப்பிடிப்பில் கலந்துக் கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தினை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago