ஜார்ஜியாவில் தொடங்கியது 'தளபதி 65' படப்பிடிப்பு

By செய்திப்பிரிவு

விஜய் நடிக்கும் 'தளபதி 65' படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நேற்று தொடங்கியது.

'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு முழுவீச்சில் படப்பிடிப்பைத் தொடரப் படக்குழு திட்டமிட்டது.

கடந்த ஏப்ரல் 6 தேர்தல் முடிவடைந்தவுடன் இரவு படக்குழுவினர் அனைவருமே ஜார்ஜியா கிளம்பிச் சென்றர். தேர்தல் அன்று சைக்கிளில் வாக்களிக்க வந்து பரபரப்பை உண்டாக்கிய விஜய், அன்றிரவே ஜார்ஜியாவுக்குக் கிளம்பிச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் ஜார்ஜியாவில் நேற்று (ஏப். 10) ‘தளபதி 65’ தொடங்கியது. படப்பிடிப்புத் தளத்தில் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

ஜார்ஜியாவில் 20 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். அவருடன் அபர்ணா தாஸ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்