திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த சுனைனா

By செய்திப்பிரிவு

திருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தி என்று நடிகை சுனைனா கூறியுள்ளார்

தமிழில் ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து ‘நீர்ப் பறவை’,‘வம்சம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு ஹலிதா ஷமீம் சுனைனா இயக்கத்தில் வெளியான ‘சில்லுக்கருப்பட்டி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர் ‘ராஜ ராஜ சோரா’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் சுனைனா நடித்து வருகிறார்.

இந்நிலையில் சுனைனாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக சமூக வலைதளங்கலில் தகவல்கள் பரவின. இதற்கு சுனைனா மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

நான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தொடர்ந்து வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. திருமணம் செய்து கொள்ளும் திட்டம் தற்போது இல்லை. என்னுடைய திரைப்படங்கள் தான் பேச வேண்டும். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. பல வகையான கதாபாத்திரங்கள் கிடைத்துள்ளன. மேலும் சில இயக்குநர்கள், என்னை மனதில் கொண்டு கதைகளை எழுதியுள்ளது உற்சாகம் அளிக்கிறது.

இவ்வாறு சுனைனா கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்