'தளபதி 65' அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

விஜய் நடித்து வரும் 'தளபதி 65' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு ஒப்பந்தமாகியுள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான முதல் படம் 'கோலமாவு கோகிலா'. இதில் நயன்தாரா உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யோகி பாபு. இந்தப் படத்தில் யோகி பாபுவின் காமெடி பெருமளவில் பேசப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' படத்திலும் யோகி பாபு நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'தளபதி 65' என அழைத்து வருகிறது படக்குழு. இதில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

தற்போது இந்தப் படத்திலும் யோகி பாபு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முந்தைய இரண்டு படங்களைப் போலவே, இதிலும் வித்தியாசமான கதாபாத்திரம் ஒன்றை யோகி பாபுவுக்கு உருவாக்கி வைத்துள்ளார் நெல்சன். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பு என்பதால், யோகி பாபு நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகக் கூடும்.

தேர்தல் முடிந்தவுடன் முழுவீச்சில் படப்பிடிப்பைத் தொடங்க தயாராகி வருகிறது 'தளபதி 65' படக்குழு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்